உத்தரபிரதேச மாநிலம் ரேபரெலியில் தவித்த, திருநெல்வேலி மாவட்ட முதியவர் முத்தையா நாடார் (75), ஆதார் அட்டை உதவியால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரெலியில் முத்தையா நாடார் மீட்கப்பட்ட விவரம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களுக்குமுன் வெளியானது.
கடந்த 13-ம் தேதி அங்குள்ள சாலையில் பசியுடன் பிச்சைக்காரர்போல் திரிந்த முத்தையா நாடாருக்கு அப்பகுதி கல்லூரி மாணவர் ஒருவர் உணவு வாங்கிக் கொடுத்தார். அவரிடம் விசாரித்ததில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அப்போது, முத்தையா நாடாரின் சட்டையிலிருந்து அவரது ஆதார் அட்டை கிடைத்தது. அதிலிருந்த விவரங்களின் அடிப்படையில் முத்தையா நாடார், திருநெல்வேலி மாவட்டம், திடியூர் அருகே பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முத்தையா நாடாரின் வங்கிக் கணக்கில் ரூ.1.64 கோடி இருப்பதாகவும், இதையறிந்த உறவினர்கள் முத்தையா நாடாரை அழைத்துச் சென்றதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வந்தன.
ஆனால் அன்றாடம் உணவுக்கே வழியில்லாதவரை, கோடீஸ்வரர் என்று கதைகட்டிவிட்டுள்ளதாக அவரது கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago