சென்னை: சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை மார்க்கத்தில், அரக்கோணம் - சோழிங்கர் யார்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது.
மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இன்று (செப்.27) காலை 8.20, 9.10, முற்பகல் 11 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு பதிலாக, மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 8.20, முற்பகல் 11 மணிக்கு பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பாசஞ்சர் சிறப்பு ரயில்: மூர்மார்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு இன்று காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கு மாற்றாக, மூர்மார்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு காலை 9.10, 10 மணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
அரக்கோணம்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10 மணி, முற்பகல் 11.15, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு பதிலாக, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 10.25, முற்பகல் 11.35, மதியம் 1.35 மணி ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருத்தணி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10.15, நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு பதிலாக, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு முற்பகல் 11.10 மணி, நண்பகல் 12.35 மணி ஆகிய நேரங்களில் பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பகுதி ரத்து: மூர்மார்க்கெட் வளாகம்-திருப்பதிக்கு இன்று காலை9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இதற்கு பதிலாக, மூர்மார்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 9.50 மணிக்கு மெமு விரைவு சிறப்புரயில் இயக்கப்படும். இந்தத் தகவல் சென்னைரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago