ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஞாநி சங்கரன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆலந்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் (58) புதன்கிழமை பகல் 1.05 மணிக்கு தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சொத்து விவரம்:
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிபெருமாள். 6-ம் வகுப்பு படித்துள்ளார். சொத்தின் தோராயமான நடப்பு சந்தை மதிப்பு ரூ.7 லட்சம், சுயமாக வாங்கிய சொத்து ரூ.60 ஆயிரம், பூர்வீக சொத்து மதிப்பு ரூ.3.50 லட்சம். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்கள் ரூ.5.25 லட்சம். கனரா வங்கியில் வைப்பு தொகை ரூ.5,100, லட்சுமி விலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் ரூ.1,507.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago