கிருஷ்ணகிரி: தாய், தந்தைக்கு அடுத்து 3வது இடத்தில் வைத்து வணங்க கூடியவர்கள் ஆசிரியர்கள் என கிருஷ்ணகிரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினவிழா நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து, சிறப்பாக பணிபுரிந்த 292 ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் வெள்ளிக் காசுகளை, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதியன்று டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளையொட்டி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேசிய அளவில் நல்லாசிரியர் விருதும் மற்றும் மாநில அளவில் நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பாக பணிபுரிந்த 292 ஆசிரியர்களுக்கு கேடயங்கள் மற்றும் வெள்ளிக் காசுகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
தாய், தந்தைக்கு அடுத்து 3வது இடத்தில் வைத்து வணங்க கூடியவர்கள் ஆசிரியர்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றால் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம் ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும், அறநெறிகளையும், ஒழுக்கத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்திற்கு கற்று தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். மேலும், அறிவூட்டும் ஆசிரிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆனந்தன், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், நகராட்சி தலைவர் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சினிவாசன், தமிழ்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகேந்திரன், ரமேஷ், மலர்விழி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிடிஏ தலைவர் கனல் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago