அரசு நிலங்களை தனியாருக்கு தாரைவார்த்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை தனியாருக்கு தாரைவார்த்த அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை வகை மாற்றம் செய்து, ஹோட்டல் சரவணபவன் நிறுவனத்தின் பொது அதிகாரம் பெற்ற பவர் ஏஜென்டான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு சதுரஅடி ரூ.12,500 என குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்து கடந்த அதிமுக ஆட்சியில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர் அபினேஷ் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் சொற்ப விலைக்கு மால் கட்டவும், ஹைப்பர் மார்க்கெட் அமைக்கவும், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் தனியாருக்கு தாரை வார்த்துள்ளனர்.

பணபலம், அரசியல் பலம், அதிகார பலம் மிக்க நபர்கள் அரசு நிலத்தை இதுபோல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் அது வீடற்ற ஏழை மக்களின் உரிமைகளுக்கும், அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சமூக நீதிக்கும் எதிராகி விடும்.

பொதுமக்களின் நலன் சார்ந்த அரசு திட்டங்களை செயல்படுத்த இந்த நிலம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் சரவணபவன் நிர்வாகம் வசம் உள்ள இந்த நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என கடந்த 2005-ம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரியான உ.சகாயத்தை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. சமூக தீமைகளுக்கு இதுபோன்ற திட்டமிட்ட மெகா ஊழல் முறைகேடுகள்தான் அடித்தளம் இடுகின்றன.

தமிழகம் முழுவதும் தனியார் அபகரித்து வைத்துள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டிய தருணம் இது. நில அபகரிப்பு என்பதும் ஒருவகையில் மற்றொரு நிலத்தை திருடுவதுதான். இதுபோன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, மனுதாரர் வசம் உள்ள அரசு நிலத்தை உடனடியாக முழுமையாக மீட்டு வேலி அமைத்து அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவர வேண்டும்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்களை தனி நபர்களுக்கு தாரைவார்த்த அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டம் இயற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை அடையாளம் காணவும், அரசு நிலங்களை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது குறித்தும், குத்தகை பாக்கியை வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்