`இணையவழியில் பதிவு செய்தால் மட்டுமே மணல் வழங்க வேண்டும்' - முதல்வருக்கு கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட காரணங்களால் ஆற்று மணல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, தரமற்ற எம்-சாண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, எம்-சாண்ட் உற்பத்தி செயல்முறைகளுக்கான சட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும். மேலும், ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கிறது. அம்மாநில அரசிடம் உடன்படிக்கை செய்து குறைந்த விலையில் மணல் பெற்று, தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். அதே நேரம், இணையவழியில் பதிவு செய்தால் மட்டுமே மணல் வழங்கும் நடைமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்கலாம். கட்டுமானப் பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழுவையும் அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE