தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.6080 கோடி ஒதுக்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நெல்லை-சென்னை மற்றும் சென்னை-விஜயவாடா உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்திய ரயில்வே தமிழகத்துக்கு நடப்பாண்டில் ரூ.6,080 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தின் 75 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு ஈடாக, நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ரூ.35,580 கோடி மதிப்பிலான பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இரு வந்தே பாரத் ரயில் சேவைகளை தமிழகத்தில் தொடங்கி வைத்ததற்காக, தமிழக மக்கள் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE