தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேல்முருகன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சேலம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் மக்களவைத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும். இட ஒதுக்கீடு கோரி போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழக அரசில் உயர் பதவிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி நிர்வாகப் பதவிகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் போது, பாஜகவினர் குறுக்கிட்டு தரக்குறைவாகப் பேசுவது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE