சிவகங்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாகப் பேசியதாக, சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் செப்.22-ம் தேதி இந்து முன்னணி, பாஜக சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகவும், மத மோதல்களை உருவாக்கும் விதத்திலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சிவகங்கை திமுக நகரச் செயலாளரும், நகராட்சித் தலைவருமான சிஎம்.துரை ஆனந்த் அளித்த புகாரின்பேரில், நகர் போலீஸார் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோன்று ஹெச்.ராஜா மீது காளையார்கோவில் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago