சென்னை: அகவிலைப்படி உயர்வு நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (செப்.26) முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் எனபோக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுவழங்கப்படுகிறது.
ஆனால் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோதும், அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் போதிய ஓய்வூதியம் இல்லாமல் ஓய்வூதியர்கள் திண்டாடி வருகின்றனர்.
மருத்துவ காப்பீடு இல்லை: மேலும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படுவதில்லை. எனவே, நிலுவை அகவிலைப்படி உயர்வைவழங்க வேண்டும், மருத்துவகாப்பீடு வழங்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பணப்பலன்களை ஓய்வுபெற்ற நாளன்றே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்.26) முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடஉள்ளோம்.
» மக்களின் கவனத்தை திசை திருப்பி தேர்தலில் வெற்றி பெறும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் உட்பட 10 இடங்களில் நடைபெறும் இந்த போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago