சென்னை: புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து, மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் கடந்த 18-ம்தேதி தொடங்கியது. பெருமாளுக்கு இந்த மாதம் உகந்த மாதம் என்பதால், பலர் புரட்டாசிமாதம் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்பது கிடையாது. இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது.
காசிமேட்டில் கடலுக்குச் சென்ற200-க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கரை திரும்பின. அதிகளவு மீன்களை மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தனர். ஆனால், விற்பனை குறைவாகவே இருந்தது. இதனால், மீன்களின் விலை குறைந்தது.
கடந்த வாரம் கிலோ ரூ.400-க்குவிற்பனை செய்யப்பட்ட சங்கரா மீன் நேற்று ரூ.200-க்கும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட வவ்வால் நேற்று ரூ.250-க்கும், ரூ.500-க்கு கடந்த வாரம் விற்பனையான வஞ்சிரம் மீன் நேற்று கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.
இதேபோல், கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனையான பெரிய இறால் நேற்று ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்பனையான சிறிய இறால் நேற்று ரூ.100-க்கும் விற்பனையானது.
மேலும், கிழங்கா, தேங்காய்பாறை உள்ளிட்ட பல்வேறு மீன்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்து விற்பனையானது. இதனால், மக்கள் பலர் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago