எம்பிபிஎஸ் காலி இடங்களில் தமிழக மாணவர்களை சேர்க்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு மூலமாகவும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு 3 சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு, தமிழகத்தில் மட்டும் 483 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59, மத்திய கல்வி நிலையங்களில் 12, என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் ஓரிடம், தனியார் பல்கலைக்கழகங்களில் 411 இடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை.

எனவே, இதில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி, அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அதை தமிழக மாணவ, மாணவிகளை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்