பொள்ளாச்சி: மகளிர் உரிமைத் தொகை என்பது மக்களவைத் தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையின் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுமார் 3 கி.மீ நடந்து ஆனைமலை முக்கோணம் பகுதி, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாகனத்தில் இருந்தபடி பேசியதாவது:
இங்குள்ள ஆட்சியாளர்கள் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் செல்ல வனப் பகுதியின் எல்லையில் சோதனைச் சாவடி அமைத்துள்ளார்கள். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு வால்பாறை செல்ல அனுமதி இல்லை என்கின்றனர்.
விரைவில் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப் படவில்லை என்றால், பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். காமராஜர் அணைகளை கட்டி விவசாயத்துக்கு நீரை கொண்டுவந்தார். கருணாநிதி தமிழகம் எங்கும் டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்தார். 65 ஆண்டுகளாக ஆனைமலை- நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவில்லை.
» மானிய விலையில் விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள்
» தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவுக்கு விட்டுக்கொடுக்கிறார் தமிழக முதல்வர். ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்துகள் சொன்ன தமிழக முதல்வருக்கு, அந்த மாநில முதல்வருடன் பேசி ஆனைமலை- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சொல்ல முடியாதா? ஒரே ஒரு குடும்பத்துக்காகத்தான் இந்த அரசு செயல்படுகிறது.
அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை. இந்தியாவிலேயே தமிழகம்தான் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடனாளி. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனாளியாகத்தான் பிறக்கிறது. கொப்பரை தேங்காய் விலையை மத்திய அரசு உயர்த்தியும்கூட இங்குள்ள விவசாயிகளுக்கு அந்த விலை கிடைக்கவில்லை என்பது வருத்தம்.
கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தான் தேங்காய் உற்பத்தி அதிகம். எனவே தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். அமாவாசையையும், ஆயிரம் ரூபாயையும் திமுகவினர் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் தான் மகளிர் உரிமைத் தொகை. வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவின் சாயம் வெளுக்கப் போகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago