மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது 7 வயது மகளுக்கு 2020-ல் வேலுசாமி என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இதுகுறித்து பரமக்குடி அனைத்துமகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வேலுசாமியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரித்து, வேலுசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், எனதுமகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்குமாறு 2022 மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்குமாறு உத்தரவிட்டும், இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஓராண்டாகியும், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்காததை ஏற்க முடியாது. இந்த தாமதத்துக்காக உள்துறை முதன்மைச் செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை அவர் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
» நெல்லை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்
» தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி
கீழமை நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை 12 சதவீதவட்டியுடனும், வழக்கு செலவுத்தொகையையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago