மெட்ரோ ரயிலின் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

சென்னை: நெரிசல் மிக்க நேரங்களில் மெட்ரோ ரயில்களின் கதவுகளை மூட விடாமல் தடுக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெரிசல் மிகு நேரங்களில் ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது, சிரமத்தை ஏற்படுத்துவது போன்றவை தண்டனைக்குரியகுற்றம் என்பதை பயணிகள் அறிந்துகொள்ள வேண்டும்.

செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2002, பிரிவு 67-ன்படி, ரயிலின் இயக்கத்தைத் தடுப்பவர், தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, ரயிலின் இயக்கத்தை தடுப்பது, சிரமத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால், பயணிகள்1860-425-1515 என்ற உதவி எண்ணைதொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்