பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக அமைதி தின விழா கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்டம் 324L சார்பாக மேற்கு சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி குழும பள்ளி வளாகத்தில் உலக அமைதி தின விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட ஆளுநர் லயன் எஸ்.கே.கருணாகரன், வேளாங்கண்ணி குழும தாளாளர் எஸ்.தேவராஜ், இணைத் தாளாளர் டெல்பின் தேவராஜ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் உரிமையாளர் மனோகரன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அரிமா சங்கம் சார்பில் டெங்கு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச் சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கண் பரிசோதனை, பல் பரிசோதனை நடைபெற்றது, விழிப்புணர்வு புத்தகத்தை ஆணையாளர் வெளியிட அதனை மேடையில் உள்ள அனைத்து விருந்தினர்கள் மற்றும் அரிமா சங்க 324L அனைத்து உறுப்பினர்களும் பெற்றுக் கொண்டனர்.

அரிமா நலத்திட்ட உதவிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அரிமா ஆளுநர், எஸ்.எம்.சில்க்ஸ் உரிமையாளர் ஆகியோர் வழங்கினர். மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்