ஓசூர்: ஓசூரில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போதிய போக்குவரத்து போலீஸாரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குறுகிய சாலையில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனிடையே, தேன்கனிக்கோட்டை சாலையில் ரயில்வே பாலம் விரிவாக்கம் பணி நடைபெறுவதால், மேலும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வட்டாட்சியர் அலுவலகம் அருகே அண்ணா சிலை, ரயில் நிலையம் முன்பு, காந்தி சிலை, அரசு மருத்துவமனை, தளி ரோடு, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பிரிவு சாலை, ராயக்கோட்டை சாலை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தர்கா, சிப்காட், எம்ஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பங்களிப்போடு காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை செயல்பாட்டில் இல்லை. மேலும், போதிய போக்குவரத்து போலீஸாரும் இல்லை. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து வருகிறது. இதனால், வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே, நகரில் ஆங்காங்கே ஏற்படும் போக்குவரத்து நெரிசலின் போது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நல்லெண்ண அடிப்படையில் களத்தில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது: ஓசூர் நகரில் போதிய போக்குவரத்து போலீஸார் இல்லாததால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் நாங்கள் களத்தில் இறங்கி போக்குவரத்தைச் சீர் செய்து அனுப்பி வைக்கிறோம். நெரிசலால், அவசரப் பணிக்குச் செல்லும் பொது மக்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இச்சிரமத்தை போக்க காலியாக உள்ள போக்குவரத்து போலீஸார் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் கூறியதாவது: ஓசூர் நகரில் போக்குவரத்தைச் சீர் செய்ய 27 போக்குவரத்து போலீஸார் பணியிடம் உள்ள நிலையில், ஒரு எஸ்ஐ உட்பட 16 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். வாகனங்களின் எண்ணிக்கை பெருகிய நிலையில், கூடுதல் போலீஸாரை நியமித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும்.
ஓசூர் மாநகரப் பகுதியில் சிப்காட், அட்கோ, நகர காவல் நிலையம் மற்றும் பாகலூர், மத்திகிரி காவல் நிலையங்கள் இருந்த போதும் சீருடை போலீஸார் போக்குவரத்து பணிக்கு உதவுவது இல்லை. அவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணிக்கு உதவினால், நெரிசலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago