கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்ட உபகரணங்கள்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான உபகரணங்கள் ராட்சத லாரிகளில் கொண்டு செல்லப்பட்டதையொட்டி வி.எம். சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகள் நிர்மாணிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அணு உலை கட்டுமானங்களுக்கான பொருட்கள் மிதவை கப்பல்கள், ராட்சத லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அந்தவகையில் ராட்சத லாரிகளில் உபகரணங்கள் மாலையில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டன.

இதையொட்டி மின்வாரியம, வி .எம்.சத்திரம் பிரிவுக்கு உட்பட்ட தூத்துக்குடி சாலையில் பாதுகாப்புக் கருதி, மின்னோட்டம் நிறுத்தப்பட்டதிலிருந்து வாகனம் செல்லும் வரை நொச்சிகுளம், கே.டி.சி.பி.காலனி, சமத்துவபுரம், பாறைகுளம், புத்தனேரி, மேட்டுக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் சென்றபின் மின்விநியோகம் வழங்கப்பட்டது.

மின்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு: இதனிடையே மின் விநியோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி பாதுகாப்பு பயிற்சி வகுப்பு பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து உதவி செயற்பொறியாளர் சின்னசாமி விளக்கம் அளித்தார். மின்கம்பங்களிலும், மின்மாற்றிகளிலும் பணி புரியும்போது கைபேசி எடுத்து பேச கூடாது என்று அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE