நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: செப்.24-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

நெல்லை: வரும் 24ம் தேதி, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பின்னர், இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார். அதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார் என்று தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

நெல்லையில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ரயில்வே வாரியத்திடம் இருந்து எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. வரும் 24ம் தேதி, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பின்னர், இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.

அந்த 9 வந்தே பாரத் ரயில்களில், திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும் வந்தே பாரத் ரயிலும் அடங்கும். அந்த நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் ரயில் பாதைகளை ஆய்வு செய்து ரயில்வே வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன்பிறகு அவர்கள், தொலைபேசி வழியாக எத்தனை மணிக்கு நடத்த வேண்டும். எவ்வளவு பேரை அழைக்க வேண்டும். காரணம், பிரதமர் காணொலி காட்சி வழியாக இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலின்படி, நெல்லை சென்னை ரயில் பாதையை ஆய்வு செய்வதற்காக வந்திருக்கிறோம். ஆய்வு முடித்து ரயில்வே வாரியத்துக்கு தகவல் தெரிவித்த பின்னர், முழு விவரங்களையும் அவர்கள் தெரிவிப்பார்கள். தொடக்க விழா திருநெல்வேலியில்தான் நடக்கும். மனதின் குரல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்று கூறுவதால், 12லிருந்து 12.30 மணிக்குள் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 9 ரயில்களில், தென்னக ரயில்வே சார்பில் நெல்லை-சென்னை ரயில் ஒன்று, அதேபோல், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் மற்றும் சென்னையிலிருந்த விஜயவாடா வரையிலான ரயில் என மொத்தம் 3 ரயில்கள் வருகிறது. டிக்கெட் விலை குறித்து இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ரயில்வே வாரியம் அறிப்பின்படி, டிக்கெட் விலை அறிவிக்கப்படும். தற்போது வரும் ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். கூட்டம் அதிகமாக இருந்தால், பெட்டிகளை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE