மண், நீரில் கலந்துள்ள உலோகங்களை கண்டறியும் கருவி: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள கிராமப்புற குடியிருப்புகளில் உள்ள குடிநீர்ஆதாரங்கள் புளோரைடு, ஆர்சனிக், கன உலோகங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மண்ணில் கன உலோகங்கள் சேர்ந்துள்ளதால் உப்புத்தன்மை கலந்து மண்ணின் தரம் பாதிக்கப்படுகிறது. மேலும்,வேளாண் நிலங்களில் விளைச்சல்குறைவதுடன், மனித உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை தவிர்க்கும் விதமாகமண் மற்றும் நீரில் கலந்துள்ள உலோகங்களை கண்டறிவதற்கு ஏதுவாக சிறிய அளவிலான கையடக்க கருவியை உருவாக்குவதற்கான வடிவமைப்பு திட்டத்தைசென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதற்கான குழுவில் சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருட்கள் துறை இணை பேராசிரியர்கள் ராம் கல்பாத்தி, டிஜூ தாமஸ், கே.வி.வித்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த கருவியைக் கொண்டு எந்த முன்பயிற்சியும் இல்லாமல் மண், நீர் ஆகியவற்றின் தரத்தைவிரைவாக கண்டறிய முடியும்.மண் மற்றும் நீரில் கலந்துள்ள உலோகங்களை அறிந்து கொள்ளவும் இந்த கருவி உதவும். இதன்மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதை செல்போன் செயலியில் தரவுகளை வழங்குவதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். இந்த கருவிக்கு தற்காலிககாப்புரிமையை பெறுவதற்கானபணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்