புதுடெல்லி: தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்துமாறு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கோரினோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் நாங்கள் வலியுறுத்தினோம். கர்நாடக அரசுக்கு தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை.
அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இவை பிறப்பிக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
» யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது: காஞ்சிபுரம் போலீஸார் நடவடிக்கை
» சீமான் வழக்கு போட்டால் ஆவணங்களுடன் நிரூபிப்பேன்: நடிகை விஜயலட்சுமி
5000 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை கர்நாடகா அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று எடுத்துக் கூறினோம்." என்றார்.
கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அனைத்து கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் தண்ணீர் திறப்பு விவகாரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு இன்று மத்திய அமைச்சரை சந்தித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago