விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாகும். விநாயகர் அறிவு, ஞானம், வளமையின் கடவுளாக பார்க்கப்படுகிறார். எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும்போதும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனைவரது வாழ்விலும் ஆரோக்கி யத்தையும், செழிப்பையும் அளிக்க வாழ்த்துகிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கி, எந்த செயலைத் தொடங்கினாலும், அதை வெற்றியுடன் செய்வதற்குரிய மனஉறுதி தானாக ஏற்படும். கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானின் அருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெறவும், மக்களைத் திரட்டவும் பாலகங்காதர திலகரால் மராட்டிய மாநிலத்தில் கணேஷ் சதுர்த்தி திருவிழா தொடங்கப்பட்டது. தற்போதும் மதங்களைக் கடந்து, மனிதநேயத்துக்கும், ஒற்றுமைக்கும் சான்றாக விநாயகர் சதுர்த்தி விளங்குகிறது. மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று மன நிறைவோடு வாழவாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: விநாயக சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஆன்மிக வளர்ச்சியையும் வார்த்தெடுக்கும் தளமாகவும், அனைத்து சாதி மதங்களையும் ஒருங்கிணைக்கும் சங்கமமாகவும் இதுபோன்ற திருவிழாக்கள் விளங்குகின்றன. இந்தநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: கடவுள்களில் முதன்மையானவர் விநாயகர். விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம் என்ற நம்பிக்கை தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.விநாயகரை வணங்கி, அவரை வழிபடும் அனைத்து மக்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

வி.கே.சசிகலா: வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக விளங்கும் விநாயகரின் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கட்டும். இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

இதேபோல, சு.திருநாவுக்கரசர் எம்.பி., கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், கொம தேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்