வேலூர்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நாளை(செப். 17) நடைபெறும் விழாவில் பங்கேற்று, காணொலி வாயிலாக திறந்துவைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு வேலூரில் தொடங்கிவைத்தார். ரூ.142.16 கோடியில் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 13 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, 1,591 குடியிருப்புகள் திறப்பு விழா வேலூரில் நாளை நடைபெற உள்ளது.
வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், வீடுகளை பயனாளிகளிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைக்க உள்ளார். மேலும், காணொலி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.11 கோடியில் 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் வருகிறார். மேலும், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நாளைமாலை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களில் கட்சிப்பணியை சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்க உள்ளார்.
தொடர்ந்து, நாளை இரவு ரயில் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago