அகதிகள் முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேரும் கள்ளத்தோணியில் இந்தியாவுக்குள் வந்ததால், அவர்களுக்கான பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இலங்கை அரசிடமிருந்து வந்தவுடன், அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.

இதில் இலங்கை நாட்டின் பிரஜைகளான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தங்களது மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனது கணவர் முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில ளிக்க உத்தரவிட்டிருந்தார்.

கள்ளத்தோணியில் வந்தனர்: இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசின் வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலக மண்டல அதிகாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 4 பேரும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கள்ளத்தோணி மூலமாகவே இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவர்கள் திருச்சி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் பயணஆவணங்களை வழங்கக் கோரிஇந்தியாவில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. உரிய ஆவணங்கள் கிடைத்ததும் இவர்கள் 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்