சென்னை: சென்னையில் நாளை (செப். 16) திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் 10 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, காலை 10 மணிமுதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காலை 8 மணிமுதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை,மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புசாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜிசாலை, வால்டாக்ஸ் சாலை,பேசின் பாலம் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.
மாற்றுப் பாதைகள்: மாலை 3 மணிமுதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புசாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா. சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளைப் பயன்படுத்தலாம்.
ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வே.ரா. சாலை மற்றும் டாக்டர்.அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளைப் பயன்படுத்தலாம்.
» ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன்: ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி
» ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பிரிட்ஜ் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமல்லோஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜாமுத்தையா சாலை வழியாகச் செல்லலாம்.
ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்லஅனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
அவதான பாப்பையா சாலை ஊர்வலம் வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளைநெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாராயண குருசாலை வழியாகச் செல்லலாம்.
ஓட்டேரி சந்திப்பை ஊர்வலம் அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்கிள்ன் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
ஓட்டேரி சந்திப்பில் ஊர்வலம் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாகச் செல்லலாம்.
கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தைஊர்வலம் அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகச் செல்லலாம்.
இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago