ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வெள்ளிக் கோப்பை - பிஎம்ஐ தெற்காசிய விருது நிகழ்வில் கவுரவம்

By செய்திப்பிரிவு

சென்னை: திட்ட மேலாண்மை நிறுவனத்தின் பிஎம்ஐ தெற்காசிய விருது நிகழ்வில் சென்னையில் செயல்பட்டு வரும் ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வெள்ளிக் கோப்பை வழங்கப்பட்டது.

திட்ட மேலாண்மை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திட்ட மேலாண்மை நிறுவனம் சார்பாக பிஎம்ஐ தெற்காசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், அண்மையில் சென்னையில் செயல்பட்டு வரும் ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வெள்ளிக் கோப்பை வழங்கப்பட்டது. ராதாத்ரி நேத்ராலயா சார்பில் அதன் இயக்குநர்கள் மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா மற்றும் மருத்துவர் வசுமதி வேதாந்தம் இருவரும் விருதை பெற்றுக் கொண்டனர்.

ராதாத்ரி நேத்ராலயாவின் அறக்கட்டளையான குருப்ரியா விஷன் ரிசர்ச் பவுண்டேஷனின் ப்ராஜெக்ட் விஷன் ஆன் வீல்ஸ் திட்டத்தின் சமூக பணியை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் கோளாறை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கிராமப்புற தொலைநோக்கு மருத்துவத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திர கிராமப்புறங்களில் 45,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE