அதிமுக மாவட்டச் செயலாளர்கள் சத்தியா, ராஜேஷ் வீடுகள் உட்பட 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்தியா, ஆர்.எஸ்.ராஜேஷின் வீடுகள் உட்பட 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்தியா (எ) சத்தியநாராயணன். இவர்கடந்த அதிமுக ஆட்சியில் 2016-21வரை தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 2021 தேர்தலில் தோல்வியடைந்த இவர், தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.2.79 கோடி என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த அரவிந்தாக்‌ஷன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சத்தியாவின் சொத்து மதிப்பை கேட்டிருந்தார். இதில் அளிக்கப்பட்ட தகவல் மூலம், சத்தியாவின் சொத்து மதிப்பு பல கோடி அதிகரித்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சத்தியா மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரவிந்தாக்‌ஷன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரம்பகட்ட விசாரணையை 2 மாதங்களில் முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சத்தியா, அவரதுமனைவி, மகள்கள் ஆகியோரது சொத்து விவரங்களை சேகரித்து, போலீஸார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில், வருமானத்துக்கு அதிகமாக சத்தியாவிடம் ரூ.2.64 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்தது. அவர் மீது லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சத்தியா மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை 6.30 மணிக்கு சென்று சோதனை நடத்தினர். தகவல்அறிந்து, ஏராளமான அதிமுகவினர் அவரது வீடு முன்பு திரண்டனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் இரு தரப்புக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி, ரமணா உள்ளிட்டோரும் அங்கு வந்தனர்.

வடபழனி திருநகர், பெருமாள் கோயில் தெரு, தியாகராய நகரில் உள்ள பாரதி நகர், கோடம்பாக்கம் பரமேஸ்வரி காலனி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சத்தியாவுக்கு சொந்தமான இடங்கள், திருவள்ளூர் மாவட்டம் மும்முடிகுப்பம் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீடு ஆகியஇடங்களிலும் சோதனை நடந்தது.

கோவை மாவட்டம் பொன்னேகவுண்டன் புதூரில் சத்தியாவின் மகள்,சிப்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்த வந்தனர். கடந்த மே மாதம் அந்த நிறுவனம் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டிக்கு மாற்றப்பட்டதாக கட்டிட உரிமையாளர் கூறினார். இதையடுத்து, சிப்ஸ் நிறுவனத்தின் வாடக ஒப்பந்த ஆவணங்களின் நகல் போன்றவற்றை போலீஸார் வாங்கி ஆய்வு செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் சத்தியாவின் நண்பரும், அதிமுகவடசென்னை மாவட்டச் செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

சென்னையில் 19, கோவையில் 2,திருவள்ளூரில் ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

வடபழனியில் உள்ள சத்தியா வீட்டில் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மாலை 6 மணி அளவில் முடிந்தது. பின்னர், வீட்டைவிட்டு வெளியே வந்த சத்தியா, செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘லஞ்ச ஒழிப்பு துறையினர் கொண்டு வந்த ஆவணங்களுடன், என் வீட்டில் இருந்த ஆவணங்களை ஒப்பிட்டு, மதிப்பீடு செய்துவிட்டு சென்றுள்ளனர். எனது நெருங்கிய நண்பர் என்பதால்ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. எல்லா கணக்கு வழக்குகளையும் சரியாக தாக்கல் செய்துள்ளேன். எனது சொத்து மதிப்பு உயர்ந்திருப்பதாக கூறுவது குறித்து எனது ஆடிட்டர் மூலம் தெளிவுபடுத்துவேன்’’ என்றார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்டசத்தியா, சென்னை சவுகார்பேட்டையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். வடபழனியில் சைக்கிள் கடை, பால்கடை, சி.டி. கடை நடத்தி வந்தார்.தி.நகர் பகுதி செயலாளர், சென்னைமாநகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்