சனாதனம் குறித்த கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையால் சர்ச்சை: போராட்டம் அறிவித்த பாஜக

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திமுக நடத்தும் சனாதனத்துக்கு எதிரான கருத்தரங்கில், திருவாரூர் திருவிக கல்லூரி மாணவர்களை பங்கேற்க செய்வதற்காக அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் அனுப்பிய சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.

திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில், அண்ணா பிறந்த நாளையொட்டி செப்.15-ம் தேதி சனாதனத்துக்கு எதிரான கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ராஜாராமன், மாணவர்களுக்கு செப்.12-ம் தேதி விடுத்த சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ‘‘சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை, அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி கலைஞர் கோட்டத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்துகொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல் பரவியதையடுத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, திருவிக கல்லூரி முதல்வரை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் செப்.15-ம் தேதி அக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட பாஜக அறிவித்தது.

இதுகுறித்து கல்லூரி பொறுப்பு முதல்வர் ராஜாராமனிடம் கேட்டபோது அவர் கூறியது: எனது சுற்றறிக்கை தவறாக பொருள் கொள்ளப்பட்டு விட்டது. எனவே, மற்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், `மாணவர்கள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துகளை, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தெரிவிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்