புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: புதுச்சேரி தருமாபுரியைச் சேர்ந்த மீனரோஷனி(28) என்ற பெண் டெங்குவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 8-ம் தேதி மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மேலும், புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த 10-ம் தேதி காய்ச்சலுக்காக தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்” என்று தெரிவித்தார்.
» மதுரை | பயணிகள் ரயில் தடம்புரண்டது: யாருக்கும் காயம் இல்லை
» “கிளினிக் வைத்துள்ள அரசு மருத்துவர்கள் பணிக்கு தேவையில்லை” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில், கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை புதுச்சேரி மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago