கொடைக்கானல்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் 5 இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றனர். அந்த பணம் நகராட்சிக்கு சென்றடையாமல் வனக்குழுவுக்கு செல்கிறது. கட்டண வசூல் குறித்து வனத்துறை மூலம் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் மலை மீது இருக்கும் ஊர்களுக்கு மாநில அரசு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் காலை முதல் இரவு வரை சனாதனம் குறித்து பேசுகிறார். காரணம், முதல்வருக்கு பயம் இருக்கிறது.
» மதுரை | பயணிகள் ரயில் தடம்புரண்டது: யாருக்கும் காயம் இல்லை
» “கிளினிக் வைத்துள்ள அரசு மருத்துவர்கள் பணிக்கு தேவையில்லை” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
சனாதன தர்மத்தை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற என்னை கைது செய்யவில்லை என்பதற்காக காவல் துறை அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர். அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடந்த இடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் எனது வீடு உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திட்டமிடுதல் சரியாக இல்லை. அந்த வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். முதல்வர், பொதுமக்களுக்கு காவல் துறை சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றி நடந்த விஷயங்களைத்தான் பாஜக குற்றச்சாட்டாக வைத்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago