சர்ச்சையில் சிக்கிய எட்டயபுரம் பள்ளியில் காலை உணவு அருந்திய குழந்தைகள்: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சையில் சிக்கிய பள்ளியில், கனிமொழி எம்.பி.,அமைச்சர் கீதாஜீவன் மற்றும்அதிகாரிகள் நேற்று மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் சமையலரை மாற்றக்கோரி, பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் குழந்தைகள் காலை உணவு திட்டத்தை புறக்கணித்து வந்தனர். சமையலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக, குழந்தைகளை பள்ளியில் உணவருந்த வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டது தெரியவந்தது.

அமைச்சர் கீதாஜீவன் பள்ளிக்குசென்று விசாரணை நடத்தினார்.குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் தனிநபர் விருப்பு வெறுப்புகளை திணிக்கக் கூடாது என, குழந்தைகளின் பெற்றோரிடம் அமைச்சர் அறிவுறுத்தினார். குழந்தைகள் இனி பள்ளியில் உணவருந்துவார்கள் என பெற்றோரும் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் நேற்று காலை உசிலம்பட்டி பள்ளிக்கு வந்தனர். குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.

சாதிப் பிரச்சினையில்லை: ஊர் கமிட்டி தலைவர் முத்துவேல்சாமி மற்றும் கிராம மக்கள்பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்கள், “எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் தான்உள்ளோம்” என்று, எம்.பி., மற்றும் அமைச்சரிடம் தெரிவித்தனர். கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோரியும் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்