தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்: தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சி, 2-வது மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நேற்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, அனகாபுத்தூரில் ரூ. 18.88 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் மேற்கு கிழக்கு தாம்பரம் பகுதிகளில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். நிறைவாக அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் ஆய்வு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், ஆணையர் அழகுமீனா மற்றும் மண்டல குழு தலைவர்கள் இ. ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், வே.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி புதிதாக தொடங்கப்பட்டது என்பதால் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது.

ஏற்கெனவே உள்ள அலுவலர்களை தரம் உயர்த்தி அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து சில இடங்களில் பணி அமர்த்தி கொண்டு இருக்கிறோம். விரைவில் அனைத்து இடங்களிலும் அலுவலர்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் அது நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்