உலக செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷுக்கு வேலம்மாள் பள்ளி சார்பில் பரிசு வழங்கி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: உலக செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோருக்கு, வேலம்மாள் பள்ளிசார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சென்னை முகப்பேரில் உள்ளவேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில், உலக அளவிலான செஸ் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை கவுரவிக்கும் வகையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்விக் குழுமத் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் முன்னிலை வகித்தார்.

இதில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர்-1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் நம்பர்-2 இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதாஸ்ரீ மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் வேலவன் ஆகியோருக்கு மொத்தம் ரூ.60 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வீரர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டு சென்னையில் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்திக் காட்டியதன் மூலம்,உலகமே நம்மைத் திரும்பிப் பார்த்தது. செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் வெற்றி பெற்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார்.

கருணாநிதி முதல்வராகப் பதவி வகித்தபோது 2006-ல் ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை சாந்தி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பரிசு வென்றார். அவருக்கு கருணாநிதி ரூ.15 லட்சம் பரிசு அறிவித்தார்.

ஆனால், சாந்திக்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், பரிசுத் தொகையை திரும்பப் பெறாமல் சாந்திக்கு வழங்கினார் கருணாநிதி. இதுதான் திராவிட மாடல் அரசு.

பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு விளையாடியுள்ளார். இந்த முறை மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்த முடியாவிட்டாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அவரை வென்றுள்ளார்.

இதேபோல, குகேஷும் சர்வதேசப் போட்டிகளில் வென்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-1 என்ற இடத்தை விஸ்வநாதன் ஆனந்த் பிடித்திருந்தார். தற்போது அந்த இடத்தை குகேஷ் பிடித்துள்ளார்.

விளையாட்டு நகரமாகும்... விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை விளையாட்டு நகரமாக மாற்றி வருகிறோம்.

செஸ் வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க தமிழகஅரசு துணைபுரியும். அவர்கள் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெறும்நாள் தொலைவில் இல்லை. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விழாவில் பேசிய செஸ் வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர், செஸ் போட்டியில் இந்தஅளவுக்கு உயர்ந்த இடத்தைப் பிடித்ததற்காக வேலம்மாள் பள்ளிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்யமிஸ்ரா, சென்னை மேயர் பிரியா,அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் இணை தாளாளர் ஸ்ரீராம் வேல்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்