அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தாமதமின்றி டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதிய கடிதத்தில்: "டிஜிட்டல் உரிமம் பெற அரசு கேபிளுக்கு சட்டப்படி முழு தகுதி உள்ளது. டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை, நடுத்தர மக்கள் தரமான கேபிள் சேவையை குறைவான விலையில் பெற முடியும். கடந்த 2012 ஆம ஆண்டே டிஜிட்டல் உரிமம்கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால் அதற்கு பின்பு விண்ணப்பித்த விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் 4-ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

மேலும் 3-ம் தேதி டெல்லியில் தங்களை சந்தித்த போது அளித்த மனுவிலும் இது தொடர்பான கோரிக்கையை வைத்துள்ளேன்.

எனவே, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தாமதமின்றி டிஜிட்டல் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உள்ளிட்ட நாட்டின் மாநகரங்களில் 31.10.2012-க்குள் கேபிள் டி.வி. ஒளி பரப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் சேவை வழங்குவதற்கான உரிமம் கோரி அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விண்ணப்பித்தோம். எனினும் இதுவரை உரிமம் வழங்கப்படவில்லை.

கடந்த முறை ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழக அரசு கேபிள் நிறுவத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்