மதுரை: எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டிக்டோ ஜாக் அமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் இன்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தல்லாகுளம் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகி பாரதி சிங்கம் வரவேற்றார். நிர்வாகி ஜோயல் ராஜ் முன்னிலை வகித்தார்.
மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குநரின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும். எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை கைவிட வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை 3 மாதத்திற்கொருமுறை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago