திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.
ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில், சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது வேன் பஞ்சராகி நின்றுள்ளது. அப்போது அதே சாலையில் வேகமாக வந்த லாரி வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நபர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago