தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்காக மத்திய அரசு தொடங்கிய ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ரூ.33.83 கோடி மதிப்பிலான கடன் 214 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016, ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ₹33.84 கோடி மதிப்பிலான கடன் 214 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் சுயமாக முன்னேறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கடனாக வழங்கப்படும். மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்படும் இக்கடன் தொகையை பெற்ற 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடங்கப்பட்ட கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தில் ரூ.33.83 கோடி மதிப்பிலான கடன் 214 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது.
தற்போது, இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வங்கிக் கிளைகளும் ஆண்டு ஒன்றுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தலா ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு அதிகளவில் பயனடையும் வகையில் அதிக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் அதிகளவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago