ஓமனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிவகங்கையை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஓமனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிவகங்கையைச் சேர்ந்த தனசேகர் (38) என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 163 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு நேற்று காலை வந்தது. விமானத்தில் இருந்து அனைவரும் எழுந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த பயணி தனசேகர் இருக்கையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து விமான நிலைய மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதனைசெய்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. விமான நிலைய போலீஸார், அவரது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஓமன் நாட்டில் வேலை செய்து வந்த தனசேகர், விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். விமான பயணத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்