வதந்திகள் பரவுவதை தடுக்க தன்னார்வலர்கள், பொதுமக்களை இணைத்து வாட்ஸ்-அப் குழுக்கள்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை

By இ.ராமகிருஷ்ணன்

வதந்திகள் பரவுவதை தடுக்க தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இணைத்து வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தும் பணியை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக கலந்து கொண்டனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸார் மீதும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வளவு பெரிய மோதல் ஏற்படுவதற்கு வதந்தியே கார ணம் என போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோல் கடந்த மாதம் சென்னையில் மீண்டும் கனமழை கொட்டும் எனவும், சுனாமி வரப்போவதாகவும் வதந்திகள் பரவின. மேலும் பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டார், மூத்த அரசியல் தலைவர் கவலைக்கிடமாக உள்ளார், பிரபல பின்னணிப் பாடகி காலமானார் என்றெல்லாம் பல வதந்திகள் பரப்பப்பட்டன. சம்பந்தப்பட்டவர் கள் சார்பாக இதற்கு உடனடி யாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் எதிர்மறையான கருத்துகளும் சில நேரங்களில் வாட்ஸ்-அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சைபர் கிரைம் போலீஸார் உதவியோடு சட்டம் ஒழுங்கு போலீஸார் இவற்றை தடுக்க முயற்சி செய்தாலும் வதந்திகளை உடனடியாக முழு அளவில் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதைத் தொடர்ந்து வதந்திகள் மற்றும் எதிர்மறை செய்திகள் பரவுவதை தடுக்க தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள், நிருபர்கள், பொது மக்கள், அரசு அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் என அனைவரையும் ஒன்றிணைத்தும், தனித்தனியாகவும் வாட்ஸ்- அப் குழுக்களை ஏற்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நுண்ணறிவு துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த குழுக்கள் செயல்பட முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் ஆணை யர் அலுவலகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “யாரையெல்லாம் வாட்ஸ்-அப் குழுவில் இணைக்க வேண்டும் என்ற பட்டியலை சேகரித்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்குள் இந்தப் பணி நிறைவடைந்து வாட்ஸ்அப் குழுக்கள் முழுமையாக செயல் பட தொடங்கிவிடும். வதந்திகள் பரப்பப்பட்டால் உண்மை நிலை உடனடியாக பொது மக்களைச் சென்றடையும் வகையில் இந்த வாட்ஸ்-அப் குழுக்கள் செயல்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்