சென்னை: 1000-வது கோயில் குடமுழுக்கு விழா அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையில்லை என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு என்றும் 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை என்றும் இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் பெருமை கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .
ஆனால், முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிக்கை. கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது குத்தகைதாரர்களிடமிருந்து மீட்டது உயர் நீதிமன்றம் தானேயன்றி அரசு அல்ல. பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்குகளில் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே கோவில் சொத்துக்கள் மீண்டும் கோவில்களின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன என்பதே உண்மை.
மேலும், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறைக்கு எந்தவிதமான சட்டரீதியான உரிமையும் இல்லை. அதற்கான உரிமை அந்தந்த கோவில்களின் நிர்வாகத்துக்கு மட்டுமே உண்டு. இந்து அறநிலையத்துறை என்பது, கோவில் நிர்வாகங்களில் குறைகள் இருந்தால் குறைகளை களைய மேற்பார்வையிடும் அமைப்பு தானே தவிர கோவில்களை நிர்வாகம் செய்யும் துறை அல்ல என்றே சட்டம் சொல்கிறது.'' இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago