விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என்றும், அன்று சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago