சென்னை: விஜய் மக்கள் இயக்க மகளிர்அணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது, விஜய்யை ‘தளபதி’என்றே அழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.
நடிகர் விஜய் தற்போது ‘லியோ’படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 68-வது படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்காக படக் குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். ஒருபுறம் பட வேலைகளில் ‘பிஸி’யாக இருந்தாலும், அரசியல் வருவதற்கான முன்னோட்டப் பணிகளையும் மெல்லமெல்ல விஜய் செய்து வருகிறார்.
அந்த வகையில், வாரந்தோறும் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து, பல்வேறு ஆலோசனைகளை விஜய் வழங்குகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் பிரிவு, தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்தனர். அவர்களை புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.
மகளிர் அணி செயல்பாடு: அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘‘மகளிர் அணியின் செயல்பாடுகள்தான் இயக்கத்தின் மீதான, மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். இயக்கத்தின் அனைத்து மக்கள் நலன் செயல்பாடுகளிலும் மகளிர் அணியினர் பங்கேற்க வேண்டும். குறுதியகம், விழியகம், பயிலகம் போன்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதேபோல், மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, இளம் தலைமுறை வாக்காளர்கள், கல்லூரி மாணவர்களை சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் பொதுப் பிரச்சினைகள், பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பதோடு, தங்கள் பகுதியில் உள்ள புதிய பெண் வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்’’ என்றார்.
இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய புஸ்ஸி ஆனந்த், விஜய்யை இனி பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்றும், ‘தளபதி’ என்றே அழைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago