பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது திட்டம்

By கி.ஜெயப்பிரகாஷ்

மாநகர பஸ் சேவையை மேம்படுத்தவும், பயணிகளின் குறையை கண்டறியவும் மாதத்தில் 3 நாட்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்ஸில் பயணம் செய்து அறிக்கை தர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எல்லை விரிவடைந்துள்ள நிலையில், சுமார் 50 கிலோ மீட்டர் வரையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பஸ்களின் இயக்கம் குறித்தும், போக்குவரத்து ஊழியர்கள் மீதும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஸ் சேவையை மேம்படுத்தவும் பயணிகளின் புகார்கள் மற்றும் குறைகளை நேரில் சென்று கண்டறியும் வகையிலும் மாநகர போக்குவரத்துக் கழகம் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் பட்டினப்பாக்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துறை அமைச்சரும், கேளம்பாக்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துறை செயலாளரும் பஸ்களில் சென்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அதிகாரிகள் மாதத்தில் 3 நாட்கள் மாநகர பஸ்சில் பயணம் செய்து 11 வகையான குறிப்புகளை தயார் செய்து அறிக்கையாக தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, "டீசல் விலை உயர்வினால், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது.

எனவே, வருவாயை பெருக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க மாதந்தோறும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர, பயணிகளின் குறைகளை நேரில் சென்று அறிந்து கொள்ளும் வகையில், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மாதத்தில் 3 நாட்கள் பஸ்சில் பயணம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், துணை மேலாளர்கள், பொது மேலாளர்கள், மூத்த மேலாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். பயணம் செய்யும் போது, பஸ் தடம் எண், பயணிகளின் எண்ணிக்கை, பயணிகளின் புகார் உட்பட மொத்தம் 11 குறிப்புகளை கொண்ட படிவத்தை பூர்த்தி செய்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் வழங்க வேண்டும். பின்னர், இந்த கருத்துக்கள், ஆலோசனையை கொண்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்