கூடங்குளம் முதல் உலையில் மீண்டும் மின் உற்பத்தி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

முதலாவது அணு உலையில் கடந்த 1-ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் முதலாவது அணு உலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. தற்போது 320 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை எட்டும் என்று அணு மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE