மதுரை: ‘திமுகவின் ஆணவத்தை அடக்க வேண்டும், 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் குல தெய்வ வழிபாட்டையும், குலசாமிகளான அய்யனாரையும், கருப்பணசாமியையும் வேரறுப்போம், எங்களுக்கு சனாதான தர்மம் வேண்டாம் என ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. ஆங்கிலேயேர்களை விரட்டியடித்த உசிலம்பட்டி மக்கள், சனாதன தர்மம் வேண்டாம் என்ற கூட்டத்தை 2024 தேர்தலில் விரட்டியடிப்பார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பிறகு மூக்கையா தேவர் மக்களுக்காக பாடுபட்டார். 25 ஆண்டுகள் எம்எல்ஏயாகவும், எம்பியாகவும் இருந்தார். முத்துராமலிங்கத் தேவர், மூக்கையா தேவரின் சிலைகள் இங்கு உள்ளன. 2024-ல் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி வரும் போது உசிலம்பட்டியில் தேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்படும்.
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் சேர்ந்து இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்க்கும் போது எம்பியாக இருந்த மூக்கையா தேவர் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய பெருங்காமநல்லூரில் 16 பேரை ஆங்கிலேயர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நடந்து 103 ஆண்டுகள் கடந்த விட்டது.
» சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென வெளுத்து வாங்கும் கனமழை!
» சென்னை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த அதேவித அபாயம் தற்போது தமிழகத்தை சூழ்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் போய்விட்டனர். ஆனால் திமுக என்ற கொள்ளைக் கூட்டம் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட மோசமான ஆட்சி இங்கு நடைபெறுகிறது. ஆங்கிலேயர்கள் ஊழல் செய்யவில்லை. நம் பணத்தை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் திமுகவினர் நமக்கு வர வேண்டிய பணத்தை ஊழல் செய்து குடும்ப சொத்தாக மாற்ற நினைக்கின்றனர். இதற்கு எதிராக வெகுண்டு எழு வேண்டிய நேரம் வந்துள்ளது.
திமுகவின் ஆணவத்தை அடக்க வேண்டும்: நடித்தது 6, 7 படம். அனைத்தும் பிளாப். அப்பா, தாத்தா பணத்தின் திமிர். அந்தப்பணத்தை வைத்து 6 படம் நடித்துவிட்டு சனாதான தர்மத்தை ஒழித்துவிடுவேன் எனச் சொல்கிறார் உதயநிதி. முத்துராமலிங்கத் தேவர் இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா?.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 8 நாள் தமிழ் மாநாடு நடைபெற்ற போது நாத்திகம் பேசிய அண்ணாவுக்கு முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தேவர் இருக்கும் வரை கொட்டத்தை அடக்கிக்கொண்டு இருந்தனர். இப்போது தேவர் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற அளவுக்கு கொட்டம் அதிகமாக உள்ளது.
2024-ல் நடைபெறும் தேர்தல் மோடி ஆட்சியின் சாதனைக்கு பாராட்டாகவும், திமுகவின் ஊழல், குடும்ப ஆட்சி, குலதெய்வ வழிபாடு, இந்து தர்மம், சனாதானம் தர்மத்தை ஒழிப்பேன் என புறப்பட்டுள்ள அரக்கர் கூட்டத்தை ஒழிப்பதற்கான தேர்தல். உசிலம்பட்டி இதுவரை திமுக ஜெயிக்காத தொகுதி. 2024-ல் மோடியை ஆதரிக்க வேண்டும். திமுகவில் தி என்றால் டெங்கு, எம் என்றால் மஸ்கிட்டோ, கே என்றால் கொசு, இதனால் 2024 தேர்தலில் ஒழித்துக்கட்ட வேண்டியது திமுகவை தான்" இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலையின் பாதயாத்திரையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் சசிகுமார், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago