சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென வெளுத்து வாங்கும் கனமழை!

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை வெளுத்து வாங்கிவருகிறது.

சென்னை எம்.ஆர்.சி நகர், மந்தைவெளி, தி.நகர், ஆவடி, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், சேப்பாக்கம் என சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது.

இரவு 8 மணி போல் தொடங்கிய மழை சிறிது நேரம் பெய்தது. பின்பு இரவு 10 மணியளவில் மீண்டும் மழைபெய்ய தொடங்கியது. இடியுடன் கூடிய கனமழையாக அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு: இதனிடையே, அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்