சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பல் தலைவன் கைது - கேரளாவில் தாக்குதல் நடத்தும் சதி திட்டம் முறியடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனை சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அமெரிக்கா, இந்தியா உட்படபல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், ஐஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தில் இந்தியாவிலும் சிலர் ஆர்வம் காட்டுவதோடு, அந்த தரப்பினர் ஒருங்கிணைவதாகவும், தங்களது கொள்கையை திணிக்கும் வகையில் இளைஞர்களிடம் மூளைச் சலவை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்கள் ரகசியமாக நிதி திரட்டுவதாகவும், வெளிநாடு சென்று ஆயுதப்பயிற்சி பெறுவதாகவும் கூறப் பட்டது.

இதையடுத்து, அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிரப்படுத்தியது. அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு பணி களை முடுக்கிவிட்டது.

ரகசிய தகவல்: இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த கும்பலின் தலைவன் சையது நபீல்அகமது, கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வருவதாகவும், சமீபகாலமாக இவர் சென்னையில் ரகசியமாக நடமாடி வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, என்ஐஏ தனிப்படையினர் சென்னையில் முகா மிட்டு, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், சென்னை பாடியில் உள்ள மேன்சன் ஒன்றில் தங்கியிருந்த சையதுநபீல் அகமது கைது செய்யப்பட்டார்.

முக்கிய ஆவணங்கள்: கடந்த பல வாரங்களாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவர் தலைமறைவாக இருந்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் நேபாளம் தப்பிச் செல்லவும் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கேரளாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருந்தார் என்று என்ஐஏஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் இருந்து முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கையை முடக்கி, பயங்கரவாத தாக்குதல் நடத்தும்சதி திட்டத்தையும் என்ஐஏ அதிகாரிகள் தற்போது முறியடித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் சத்தியமங்கலம் அருகே பதுங்கி இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஆசிப் என்பவர் உட்பட 2 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்