அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம்முடைய பள்ளிகளில் ஆரம்பவகுப்புகளில் ‘எண்ணும் எழுத்தும்’திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், அவர்களின் கற்றல்அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்வது அனைவரின் கடமையாகும்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்யும்போது, குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ ஆகிய ஒவ்வொருவகுப்புக்கும் ஏற்ற அறிவுறுத்தல்களை அவர்கள் பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆசிரியரின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங்களில் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கற்றல் விளைவுகள் எட்டப்படுகின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும். கற்றல்விளைவுகளுடன் எல்லா நடவடிக்கைகளும் ஒத்துப்போகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபடுவதை உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைச் சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமின்றியும் இருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.
படைப்பாற்றலையும் திறமையையும் ஊக்குவிக்கும் விதமாக, ’கதைப் பகுதி’, ‘பாடல் பகுதி’, ‘செயல்பாடுகள் பகுதி’, ‘கலைமற்றும் கைவினைப் பகுதி’,‘வாசிப்புப் பகுதி’ உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என்றும், அவையெல்லாம் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்றும் சரிபார்க்க வேண்டும். கற்பித்தல் முறைகளில் இத்தகைய முன்னுதாரண மாற்றத்தை வழிநடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் உதவ வேண்டுமே தவிர நீங்கள் பார்வையிடச் செல்வது அச்சுறுத்துவதாக இருக்கக்கூடாது.
காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை மதிப்பிடவும். கழிப்பறைகள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதிசெய்ய வேண்டும். தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பொது சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைந்து பள்ளி சுகாதாரத் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்துக் குழந்தைகளின் சுகாதாரப் பரிசோதனையும் கைப்பேசி செயலி மூலம் ஆசிரியர்களால் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும் முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வுசெய்வதையும், வகுப்பறைகளைக் கண்காணிப்பதையும் பள்ளிப் பார்வை செயலி மூலம் உறுதிசெய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago