விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி: இந்திய அளவில் தமிழகம் 2-ம் இடம்

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய அளவில் விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டியில் தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் 2-ம் இடம் பிடித்துள்ளார். அவரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.”அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு, கடந்த மாதம் 19 முதல் 21-ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற்றது.

இப்போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் ஒரு விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ஜெ.தேவிப்பிரியா கலந்து கொண்டார். அவர் 250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இதையறிந்த டிஜிபி சங்கர் ஜிவால், அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தேவிப்பிரியாவை நேற்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். திருவண்ணமலை நகர காவல் நிலையத்தில் தனிப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ஜெய்சங்கர் என்பவரது மகள் தேவிப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்