சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்த பல்வேறு திட்டங்களை நடிகர் விஜய் வகுத்து வருகிறார். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் சென்னைபனையூரில் பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நடந்தது.
இந்நிலையில், செப்.9-ம் தேதி மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மகளிர் அணி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில், சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
காலை 10.15 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மகளிர் அணி தலைவிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ‘லிங்க்’கில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago